பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!!: வடக்கு கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North-East News 2024.02.09

பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!!

வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ளச்சென்ற பொதுமக்கள் அந்தரிப்பிற்குள்ளாகினர்.

காணி உறுதி பத்திரத்தை பெற்றுக்கொண்ட யாழ்.மக்கள்

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழில் 106 பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. "அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல்" நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - அம்பனில் மணல் அகழ்வை நிறுத்த கோரி மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 2010 ஆண்டிலிருந்து இதுவரை சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் நியமங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பெருந்தொகை போதை மாத்திரைகள் கைப்பற்றல்

மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 1200 போதை மாத்திரைகளுடன் இரு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 23 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.