ஆபத்தான முறையில் தொங்கி கொண்டு சென்ற மாணவர்கள்!: ஹட்டன் - சலங்கந்த பகுதியில் பேருந்தின்மையால் ஏற்பட்ட அவலம் (காணொளி)
ஹட்டன் - சலங்கந்த பகுதியில் அரச பேருந்து சேவையில் ஈடுபடாததால் பாடசாலை மாணவர்கள் பேருந்தில் தொங்கி கொண்டு சென்ற அவல நிலையே இது.
இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகள் ஒன்று கூட இன்று காலை முதல் சேவையில் இல்லை என்பதையும் அறியமுடிகின்றது.
குறித்த பகுதியின் பாதைகள் வலைந்து ஆபத்தான நிலையிலேயே காணப்படுகின்றது. ஆனாலும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பணயிகள் அனைவரும் பேருந்தில் தொங்கிய நிலையிலேயே பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்கள் அதிகம் விபத்துக்கள் ஏற்பட ஏதுவாக அமையும் என்பதினால் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.