வாட்ஸ்-அப் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதா?: அரச கண்காணிப்புக்கு உட்பட்டவையா? - உண்மையை வெளிப்படுத்தும் factseeker

OruvanOruvan

factseeker

வாட்ஸ்-அப் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக சில பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறன. இது போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படுகிறமையை அவதானிக்க முடிகிறது.

இந்த பதிவில், சமூக ஊடகங்களில் நீங்கள் புதிய விதிகளால் கண்காணிக்கப்படுவீர்கள் என்றும், புதிய தகவல் தொடர்பு விதிமுறைகளின்படி வாட்ஸ்-அப், பேஸ்புக், எக்ஸ் (X) அழைப்புகள் பதிவு செய்யப்படும் எனவும், அவை அனைத்தும் அரச கண்காணிப்புக்கு உட்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனாவசிய செய்திகளை பகிர்வதனை தவிர்க்கவேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வாட்ஸ்-அப் மூலம் செய்திகளை அனுப்பிய பின் (சரி அடையாளம்) குறித்த குறிப்பு : மூன்று நீல நிற 'சரி' அடையாளங்கள் இருப்பின் கோரிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது என்றும், சிவப்பு நிறத்தில் 'சரி' அடையாளம் இருப்பின், அரசாங்கம் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றும் அர்த்தம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலைக் காப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் பின்னணியில் இதுபோன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுவதாலும், இது குறித்து ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டதாலும் factseeker இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்துள்ளது.

WhatsApp நிறுவனம் கூறுவது என்ன ?

இந்த அறிகுறிகள் குறித்து, WhatsApp தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளது:

• செய்தி வெற்றிகரமாக அனுப்பப்பட்டது

• வெற்றிகரமாக அனுப்பப்பட்ட செய்தி சம்பந்தப்பட்ட நபரின் தொலைபேசி அல்லது சாதனத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்டது.

• செய்தியைப் பெற்ற நபரால் செய்தி வாசிக்கப்படுகிறது.

இந்த மூன்று மதிப்பெண்கள் மட்டுமே உத்தியோகபூர்வமாக வாட்ஸ்-அப் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மதிப்பெண்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், சமூக ஊடக வலையமைப்பில் செய்திகளை அனுப்புவதற்கு வாட்ஸ்-அப் என்ட் டு என்ட் என்க்ரிப்ஷனைப் பயன்படுத்துவதுடன், தனிப்பட்ட செய்திகள் மற்றும் அழைப்புகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மாறாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் அவற்றைப் வாசிக்கவோ, கேட்கவோ முடியாது என்பதை வாட்ஸ்-அப் நிறுவனம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை CERT நிலைப்பாடு

அவ்வாறானதொரு நிலை குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், இதுபோன்ற விடயங்களை செயல்படுத்துவதில் சட்ட மற்றும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் இலங்கை CERT தெரிவித்தது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்து

இது தொடர்பில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் திருமதி மேனக பத்திரனவிடம் factseeker மேற்கொண்ட விசாரணையில், அவ்வாறான தீர்மானங்கள் எதையும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களை அவதானத்துடன் பயன்படுத்துமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.

இந்தியாவிலும் இதேபோன்று செய்திகள் பகிரப்படுகின்றன

இந்த செய்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நாடுகளில் பகிரப்பட்டு வருவதுடன், இந்தியாவிலும் இதேபோன்று செய்திகள் பகிரப்படுகின்றமையையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இதன்படி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை factseeker உறுதிப்படுத்தியுள்ளது.