கோட்டாபய அவரது குடும்பத்தினரின் பலிகடாவாக மாறினார்: -ராஜபக்சவினர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்-திலித் ஜயவீர

OruvanOruvan

Mawbima janatha Party Leader Dilith Jayaweera

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது குடும்பத்தினரின் பலிகடாவாக மாறியதாக அவரை பதவிக்கு கொண்டு வர பங்களிப்பை வழங்கிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

சிங்கள வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தேவை ராஜபக்சவினருக்கு இருந்தது.

ராஜபக்சவினர்,அவர்களின் புதல்வர்கள் மற்றும் சகோதரர்களுக்கு குடும்ப அத்தியவசியங்களும், தனிப்பட்ட தேவைகளும் இருந்ததே தவிர நாட்டை பற்றிய உணர்வு இருக்கவில்லை.

நானும் ராஜபக்சவினர் நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு வர உதவியுள்ளேன். நாட்டில் மாற்றங்களையும் ஒழுக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய தலைமைத்துவம் கோட்டாபயவிடம் இருப்பதாக 69 லட்சம் மக்கள் நம்பினர்.

நாட்டின் ஏனைய மக்களை போல் நாங்களும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தோம்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கோட்டாபயவுக்கு இருந்த போதிலும் அவரது சகோதரர்களிடம் இருந்து அவர் விடுப்பட முடியவில்லை.

மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் ராஜபக்சவினர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. எனினும் அந்த கட்சியினரே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வரும் மகிந்த சிந்தனையை கூட உருவாக்கினர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி, ராஜபக்சவினருடன் இணைந்து பணியாற்றியது.

அதற்கு முன்னர் சந்திரிகாவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதுதான் எனது முதல் தேர்தல் பிரசார நடவடிக்கையாக இருந்ததுடன் அந்த இடத்தில் மக்கள் விடுதலை முன்னணியிரும் இருந்தனர்.

அதன் பின்னர் சஜித்துடன் இணைந்து அரசியல் செய்தனர். மீண்டும் ரணிலுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டனர். மக்கள் விடுதலை முன்னணியினர் எவரும் இணைந்து அரசியலில் ஈடுபடவில்லை?.

மக்கள் விடுதலை முன்னணியினரே நாட்டின் அரசியல் பாசாங்குத்தனத்தின் அடையாளம். ஏனைய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு ஓரளவு புரிதல் இருந்தது.

எனினும் அனுரகுமார திஸாநாயக்வின் மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்விதமாக ஏனைய அதனைத்து அரசியல் கட்சிகளுடனும் இரகசிய உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு மேற்கொள்ளும் திருடன் பொலிஸ் விளையாட்டு வெட்கத்திற்குரியது.

மக்கள் விடுதலை முன்னணியின் தோழர் அனுரகுமார தனது இந்திய பரவல்வாத கொள்கையை கைவிட்டு விட்டா இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் என நான் கேட்க விரும்புகிறேன்.

1988 ஆம் 89 ஆம் ஆண்டுகளில் பாம்பாய் வெங்காயம் விற்பனை செய்த எத்தனை பேரை அவர்கள் கொலை செய்தனர்.எனினும் தற்போது மக்கள் விடுதலை முன்னணிக்கு என்ன நடந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கடந்தகால கொள்கைகள் தற்போது தலைகீழாக மாறியுள்ளன எனவும் திலீத் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.