புதிய களனி பாதையில் இருந்து துறைமுகம் செல்லும் பாதை மூடப்பட்டது: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Local Short Story 09.02.2024

புதிய களனி பாதையில் இருந்து துறைமுகம் செல்லும் பாதை மூடப்பட்டது

புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் பாதை திருத்தப் பணிகள் காரணமாக இன்று (09) இரவு 9 மணி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி காலை 5 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிவேகப் பாதை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.கட்டுநாயக்காவிலிருந்து களனி பாலத்திற்குள் பிரவேசித்து துறைமுகத்தை நோக்கிச் செல்லும் பாதை மாத்திரமே மேற்கண்ட தினங்களில் மூடப்படும்.

மலையக மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இஹல வட்டவல - ரொசெல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணத்தினால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவஞானம் சிறீதரன் ஜேர்மன் தூதுவர் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

OruvanOruvan

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக மீண்டும் ஹர்ஷ

பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை டிசம்பரில்

உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

காசா இன அழிப்பிற்கு எதிராக கல்முனை வாழ் முஸ்லிம்கள் எதிர்ப்பார்ப்பாட்டம்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம் மற்றும் துஆ பிராத்தனை இன்று கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில் இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கத்திற்கு ஊர்வலமாக சென்று நிறைவடைந்தது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; 4 ரஷ்ய பிரஜைகள் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்து, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை - மத்தளவுக்கு இடையில் 187 KM பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

அவுஸ்ரேலியாவில் மேற்கு பிரீமியர் ரோஜர் குக்கை சந்தித்த ஜனாதிபதி

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்ள உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்ரேலியாவில் மேற்கு பிரீமியர் ரோஜர் குக்கை இன்று காலை சந்தித்தார்.

OruvanOruvan

தேடப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் பட்டியலில் மேலும் 349 நபர்களின் பெயர்கள்

நாடு தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் முன்னர் பகிரப்பட்டிருந்த 42,000 க்கும் மேற்பட்ட தேடப்படும் சந்தேக நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் மேலும் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர்களை இலங்கை பொலிஸார் சேர்த்துள்ளனர்.

12 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியவர் தற்கொலை செய்துக்கொண்டார்

12 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி காலி மாவட்டம், உடுகம நீதவான் நீதிமன்றத்தின் கழிவறைக்குள் கழிவறையை துப்பரவு செய்ய பயன்படுத்தும் இரசாயனத்த குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டால் மாத்திரமே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்

அரசாங்கங்களும் அரச இயந்திரங்களும் இனங்களுக்கிடையில் பிரிவினை மனப்பாங்கை ஊக்குவிக்கும் பாரபட்சங்கள் தோற்கடிக்கப்பட்டு சமத்துவ சிந்தையுடன் செயலாற்றுவதன் ஊடாகவே ஒருமித்த மக்களாக நாட்டை முன்நோக்கி கொண்டுசென்று உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என குரலற்றவர்களின் குரல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற வீதியில் நீண்ட வரிசையில் போக்குவரத்துச் சபை பேரூந்துகள்

போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் நாடாளுமன்ற வீதியில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிடுவதற்காகவே குறித்த பேரூந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பம் கோரல் நாளை

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேலும் 400,000 பயனாளர்களை தேர்வு செய்யும் புதிய விண்ணப்பம் கோரல் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் - நிதி இராஜாங்க அமைச்சு

கொழும்பில் நாளை 15 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு - 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

பல கோடி பெறுமதிமிக்க மாணிக்கக்கற்களுடன் சிக்கிய தேரர்

சட்டவிரோத முறையில் விற்பனை செய்யப்படவிருந்த 37 கோடி ரூபா பெறுமதியுள்ள மாணிக்கக்கற்களை கொஸ்லந்த பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இரண்டு நீல மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வெலிவேரி பிரதேசத்தின் தேரர் ஒருவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாவாக அதிகரிப்பு

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (08) ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1,980 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

ஜோர்தானில் சிக்கியிருந்த 66 இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்பினர்

ஜோர்தானில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது வேதனம் வழங்கப்படாமல் சிரமத்திற்குள்ளான இலங்கைச் சேர்ந்த 66 தொழிலாளர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். குறித்த 66 தொழிலாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அரச வருமானத்தை அதிகரிக்க மதுபான விற்பனை அதிகரிப்பிற்கு தீர்மானம்

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க மதுபான விற்பனை நிலையங்களை அதிகரிப்பிற்காக 200 மதுவரி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், கடந்த 7 ஆம் திகதி வரையில் 10 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகநாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக் தெரிவித்தார்.

செல்லக்கதிர்காமத்தில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

செல்லக் கதிர்காமத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த வீதியில் அதிவேகமாக பயணித்த சிறிய ரக லொறியொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதையோர மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதில் வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிரிஹானை - வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்

மிரிஹானை - ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகக் கருதப்படும் வயோதிப தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து கண்டறியாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.

விரைவில் இலங்கை வரும் சாந்தன்; கடவுச்சீட்டு அனுப்பிவைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு இலங்கை கடவுச்சீட்டை வௌியுறவு அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யை சந்திக்க ராஜபக்‌ஷ குடும்பம் ஆர்வம்

இலங்கைக்கு வருகை தரவுள்ள தென்னிந்திய நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய்யை சந்திக்க ராஜபக்‌ஷ குடும்பம் ஆர்வம் காட்டி வருவதாக இந்தியாவின் வெப்துனியா இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த போது இலங்கையில் இருந்து முதல் ஆளாக அவருடைய அரசியல் பயணத்துக்கு நாமல் ராஜபக்‌ஷ வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.