இலங்கையை உலகில் பிரபலமான சுற்றுலா தளமாக மாற்றிய திமிங்கிலங்கள்: வருடத்தில் எந்த நேரம் சென்றாலும் பார்க்கலாம்

OruvanOruvan

sri Lankan blue whale TripAdvisor

இலங்கை நீல நிற திமிங்கிலங்களை பார்வையிடக்கூடிய உலகில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது.

வேறு நாடுகளில் கடலில் திமிலங்களை பார்க்க சென்றாலும் ஒரு சில திமிங்கலங்களையே பார்க்க கிடைக்கும். எனினும் இலங்கையில் குறுகிய தூரம் கடலில் பயணித்தால், சில வகை திமிங்கிலங்களை மாத்திரமல்லாது, டொல்பின், ஆமை போன்ற பல கடல் வாழ் உயிரினங்களை காணக்கிடைப்பது சிறப்பம்சமாகும்.

கல்பிட்டி, திருகோணமலை, தென்பகுதியில் மிரிஸ்ஸ போன்ற இடங்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக மரிஸ்ஸ பிரதேசத்தில் வருடத்தில் எந்த நேரத்தில் சென்றாலும் நீல நிற திமிங்கிலங்களை பார்வையிட முடியும்.

மிரிஸ்ஸஎன்பது இலங்கை தெற்கு முனை.இந்த பிரதேசத்தில் இருந்து 5 கடல் மைல் தூரம் பயணித்தால் சுமார் மூன்று கிலோ மீற்றர் ஆழமான அகழிகள் இருக்கும். இதனால், திமிங்கிலங்கள் கடலில் ஆழத்தை நோக்கி நீந்திச் செல்ல முடியும்.

அத்துடன் பிரதேசத்தில் ஆறுகள் கடலுடன் கலப்பதால், சிறிய கடல் வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. இதனால், திமிலங்களுக்கு அதிகமான உணவும் கிடைக்கின்றது.

வங்களா விரிகுடாவில் இருக்கும் திமிங்கிலங்கள் இலங்கை ஓரமாக சென்று அந்தாட்டிகா அல்லது அரபி கடலை அடைக்கின்றன.

இதனால் மிரிஸ்ஸ பிரதேசத்தில் அதிகளவில் திமிங்கிலங்களை காணமுடியும் என உருகுணை பல்கலைக்கழகததின் கடல்சார் விஞ்ஞானப்பிரிவின் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

எனினும் அண்மைய காலமாக இலங்கையை சூழவுள்ள கடலில் டொல்பின்,திமிங்கிலங்கள் மற்றும் ஆமைகளை குறைவாகவே காணமுடிவதாக சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இதற்கு சான்றளிக்கும் விஞ்ஞான ரீதியான ஆய்வு அறிக்கைகள் எதுவுமில்லை.