அநுரவை அவசரமாக டில்லிக்கு அழைத்த நோக்கம் என்ன?: அவுஸ்ரேலியாவில் ஜெய்சங்கரை சந்திக்கும் ரணில்

OruvanOruvan

ஏழாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (Seventh Indian Ocean Conference) கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் மாநாடு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

இந்தியப் பெருங்கடல் மாநாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் முதன்மையான ஆலோசனைகளை நடத்தும் மன்றமாகும்.

இம்முறை மாநாட்டின் கருப்பொருள் "நிலையான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடலை நோக்கி". (Towards a Stable and Sustainable Indian Ocean)

மாநாட்டின் தொடக்க அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோருர் பங்கேற்க உள்ளனர்.

22 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், 16 நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் சில நாடுகளின் தலைவர்களும் பங்கேங்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் தீர்மானமிக்க சந்திப்பொன்று இடம்பெற உள்ளதாக தெரியவருவதுடன், இதன்போது புதுடில்லியின் திடீர் அரசியல் நகர்வுகள் குறித்து ஜனாதிபதி வினவ உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரை அழைத்து கலந்துரையாடப்பட்ட விவகாரம் குறித்து எஸ்.ஜெய்சங்கரிடம் ஜனாதிபதி கேட்டறிந்துக்கொள்வாரெனவும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ள நிலைப்பாட்டையும் ரணில் எடுத்துரைப்பாரென அறிய முடிகிறது.