ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா விஜயம்: அந்நாட்டு பிரதமருடனும் விசேட கலந்துரையாடல்

OruvanOruvan

President Ranil Wicramasingha

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அவுஸ்ரேலியா சென்றுள்ளார்.

குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவும் உள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனும் இந்தப் பயணத்தில் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார்.

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்ட நிலையில், அவரது18ஆவது அதிகாரப்பூர்வ பயணமாக இது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது