தென்னிந்திய பிரபலங்களுடன் புகைப்படம் எடுக்க யாழ்.மாநகர சபையிடம் அனுமதி பெறவில்லை: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North - East News updates

யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும், சந்திப்பதற்கும் 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் அறவிடப்படும் நிகழ்வுக்கு யாழ். மாநகர சபையிடம் எவ்வித அனுமதியும் இதுவரை பெறப்படவில்லை. கேளிக்கை நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்படவேண்டும். நுழைவுச் சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும். எனினும் குறித்த நிகழ்வுக்கு அனுமதி கோரப்படவில்லை என யாழ். மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.

OruvanOruvan

உள்ளூர் துப்பாக்கி, வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

திருகோணமலை -புல்மோட்டை மணிபுர பகுதியில் விசேட பொலிஸ் அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடடிக்கையின் போது உள்ளூர் துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர் 31 வயதுடைய இந்திக சுகத் பண்டார என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு-ஆளுநரை சந்தித்த யாழ்.சாவல்கட்டு மீனவர்கள்

இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். பிரச்சனைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்றைய சந்திப்பின்போது இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவதாக ஆளுநர் உறுதியளித்திருப்பதாக சாவல்கட்டு மீனவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய தேர் திருவிழா

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சுழிபுரத்தில் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் நெல் அறுவடை

யாழ்ப்பாணம் - சுழிபுரம் மேற்கு திருவடிநிலை பகுதியில் நெல்வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் நெல் அறுவடை மேற்கொள்ளபட்டது.

யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவும் சூழல் ; 07 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த ஏழு பேருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டபாய ஆட்சியில் இடை நிறுத்தப்பட்ட விகாரை கட்டுமானம் மீள ஆரம்பம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கோட்டபாய ராஜபக்ச காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட விகாரை கட்டுமானம் மீள ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

OruvanOruvan

மட்டக்களப்பில் விவசாயிகளிடம் கள்ளதராசு மூலம் மோசடி

மட்டக்களப்பில் விவசாயிகளிடம் சட்டவிரோத கள்ள தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளை கண்டறிந்து நேற்று புதன்கிழமை (7) முற்றுகையிட்ட சோதனை நடவடிக்கையில் 8 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.