அரசியலில் முக்கிய திருப்பம் நடைபெறவுள்ளதாக தகவல்: எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த ஜகத் பிரியங்கர

OruvanOruvan

Sri Lanka Parliament

நாட்டின் அரசியலில் பரப்பரப்பான நிலைமை காணப்படும் சூழலில் கடந்த சில திங்களகாக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நடக்கும் சில அரசியல் திருப்பங்களை காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில், இன்றிரவு மிக முக்கியமான அரசியல் சம்பவம் ஒன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அடுத்து நாட்டின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான அரசியல் திருப்பத்தின் ஆரம்பமாக இது இருக்கும் என பேசப்படுகிறது.

இந்த நிலையில், திடீர் வாகன விபத்து காரணமாக உயிரிழந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற ஆசனத்திற்கான வெற்றிடத்திற்கு புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பட்டியல் அடுத்த இடத்தில் இருந்த ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட அவர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துக்கொண்டார். இதன் காரணமாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனக்கிருந்த ஆசனம் ஒன்றை இழந்துள்ளது.

ஜகத் பிரியங்கர, தேசிய முன்னணியின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.