காசா மக்களை வெளியேற்ற இஸ்ரேலால் ஒருபோதும் முடியாது: அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் காண்டம்

OruvanOruvan

Gaza War

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காசாவில் கான்யூனிஸ் நகரைத் தொடர்ந்து ரஃபாவில் இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஹமாஸின் கோரிக்கையும், இஸ்ரேல் நிராகரித்துள்ளது. மேலும் இந்த பிரச்சினையைக் குறித்துப் பேச அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி ப்ளிக்கன், மத்திய கிழக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்துத் தெரிவித்துள்ள, ஆண்டனி ப்ளிக்கன், காசாவில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ள அவர், காசாவில் இருந்து மக்களை வெளியேற்ற இஸ்ரேலுக்கு உரிமம் வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.

OruvanOruvan

போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றன.

இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டு வர 135 நாட்களுக்கு, 3 கட்டமாக போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹமாஸ் முன்மொழிந்துள்ளது. அதுவும் 45 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. முதல் கட்டத்தில், இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 1,500 பாலஸ்தீனிய பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும்.

இதற்கு பதிலாக காசாவில் உள்ள பெண் பிணையக் கைதிகள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் விடுவிக்கப்படுவர். இரண்டாம் கட்டத்தில் மிஞ்சியிருக்கும் ஆண் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

மூன்றாம் கட்டத்திலும் பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் இறுதியில் இருதரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இஸ்ரேல் படைகள் முழுவதுமாக வெளியேற வேண்டும். இறந்தவர்களின் உடல்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர்நிறுத்தத்தின் போது, இஸ்ரேலியப் படைகள் முற்றிலுமாக வெளியேறும் நிலையில் காசாவின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலால் காசாவின் 85 சதவீத மக்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து பற்றாக்குறைக்குயால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் மக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan