மலையகத்தில் தமிழர்கள் மீது இனவாதத்தை கக்கும் பொலிஸார்: ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் வடிவேல் சுரேஷ் கண்டனம்

OruvanOruvan

உடனடியாக சம்பள உயர்வு வேண்டும்

நாடாளுமன்றில் வடிவேல் சுரேஷ்,

இந்திய வம்சாவளி மக்கள் கடந்த 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்க பாடுபட்ட சமூகம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், கல்வி வசதிகள் இன்றிவாழும் மக்களாக உள்ளனர்.

இவர்களை கௌரவப்படுத்த பல சந்தர்ப்பங்கள் நாட்டை ஆண்ட தலைவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், அதனை எவரும் செய்யவில்லை.

காணி உரிமையை வழங்கும் செயல்பாடுகளை அமைச்சர் ஹரின் பெரணான்டோ முன்னெடுத்து வருகிறார். அதனை வரவேற்கிறோம்.

இந்த திட்டம் மலையகத்துக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் முழுமையடையும்.

டிசம்பர் 31ஆம் திகதி முடிந்து ஜனவரியும் முடிந்துவிட்டது. ஆனால், சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை.

உடனடியாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வேண்டும். ஜனாதிபதியும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுத்து வந்தார். ஆகவே, உடனடியாக சம்பள உயர்வை வழங்க வேண்டும்.

மலையக மக்களுக்கு இந்தியா வீடுகளை வழங்கும் என பார்த்துக்கொண்டிருக்காது வீடுகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பு வேண்டும்.

பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையக மக்கள் பாடசாலைகளில் வாழ்ந்து வருகின்றனர். பாதைகள் சீரமைக்கப்படவில்லை.

மலையக பொலிஸ் நிலையங்களில் இனவாத செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. பெருந்தோட்டக் கம்பனிகள் இங்கு பொலிஸாரின் ஊடாக மக்களை கட்டுப்படுத்துகின்றன. உடனடியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.” என்றார்.

தமிழ்த் தேசிய விவகாரம் தீர்க்கப்பட்டாமையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்,

நாடாளுமன்றில் சுமந்திரன்,

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி தமது கொள்கை விளக்க உரையில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

பதவியேற்ற தருணத்தில் உடனடியாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுவோம் என அவர் கூறியதுடன், நீங்கள் தயாரா? நீங்கள் தயாரா? என சபையின் இரு பக்கங்களிலும் அமர்ந்திருந்தவர்களை பார்த்து கேள்வியெழுப்பியிருந்தார்.

அனைத்துக் கட்சி மாநாடுகளை மூன்றுமுறை நடத்தியிருந்த ஜனாதிபதி, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் எனக் கூறியிருந்தார்.

75ஆவது சுதந்திர தினமும் முடிந்துவிட்டது. ஆனால், இனப்பிரச்சினை பற்றி மூச்சுக்கூட விடவில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண அவருக்கு அரசியல் பலம் கிடையாது என நாம் கூறினோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்ப்பவர்களை கொண்டு இதற்கு தீர்வுகாண முடியாதெனவும் கூறினோம். வார்த்தை ஜாலங்களால் எம்மை ஏமாற்றினார். ஆனால், நாம் முழுயைான ஒத்துழைப்பை வழங்கினோம்.

அடுத்த கூட்டத்திற்கான திகதி மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும் ஒரே முடிவாக உள்ளதாக 4ஆவது சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் அத்திவாரமாக உள்ளது தமிழ்த் தேசியத்துக்கான இனப்பிரச்சினைதான். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படாமல் இந்த தீர்மானத்தை எடுத்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது.” என்றார்.

தீவிரவாதிகளை ஒழித்த தலைவர் ரணில்

அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உரையாற்றுகையில்,

அரசாங்கத்தை பொறுப்பேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பொறுப்பேற்கவில்லை..

ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றது மாத்திரமின்றி நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் சுற்றிவளைக்க முற்பட்ட போது அவர்களையும் விரட்டியடித்தார். அவ்வாறான தலைவர் ஒருவர்தான் எமக்கு அவசியமாகும்.

நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திரமாக பேசும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்தது ரணில் விக்ரமசிங்கதான். தீவிரவாதிகளுக்கு வளைந்துக்கொடுக்கும் தலைவர் அல்ல அவர்களை ஒடுக்கும் தலைவரே நாட்டுக்கு அவசியமாகும்.”என்றார்.

காணிப்பிரச்சினைக்கு தீர்வுகண்டால் இனப்பிரச்சினையை தீர்க்க முடியும்

ஏ.எச்.எம்.அதாவுல்லா உரையைாற்றுகையில்,

”சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிசெய்த அனைத்து அரசாங்கங்களும் கடன்களை வாங்கியே தமது திட்டங்களை முன்னெடுத்திருந்தன.

2022, 2023ஆம் ஆண்டுகளில் வரலாற்றில் நாம் எதிர்கொண்டிராத பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது. ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி துறக்க நேரிட்டது. இதனை படிப்பினையாகவும் ஒரு முன்னுதாரணமாகவும் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையாது அதனையே வெளிப்படுத்தியது. மக்கள் வரிசைகளில் நின்ற நிலையை மாற்றியமைத்த நபராக ஜனாதிபதி இருக்கிறார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை கட்டுப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதே தற்போதைய தேவையாகும்.

எமது நாட்டில் பாரிய வளங்கள் உள்ளன. நாட்டில் பெய்யும் மழை, காடுகள்தான் எமது வளங்கள். நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை தூக்கியெறிந்துவிட்டு இறக்குமதி செய்கிறோம்.

எமக்கு தேவையான கல்வி முறையில் இருந்தும் விடுபட்டுள்ளோம். பிரித்தானியர்களுக்குத் தேவையான கல்வி முறையைதான் நாம் பயில்கிறோம். எமக்குத் தேவையான கல்விமுறையொன்று நாட்டில் இல்லை.

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற மனநிலை அனைத்து மக்கள் மத்தியிலும் எழ வேண்டும். இது எமது நாடு என்ற உணர்வில் இருந்து மாறியிருக்கிறோம்.

தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் மாறுபட்ட எண்ணங்களை கொண்டுள்ளோம்.

காணிப் பிரச்சினையே இனப்பிரச்சினைக்கான பிரதான காரணமாக உள்ளது. காணிப்பிரச்சினை தீர்க்கப்படுமாயின் 90 சதவீதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும்.

அந்த அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு சமமான வகையில் அல்லது விகிதாசார முறையில் காணிகள் பகிர்த்தளிக்கப்பட வேண்டும்.” என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையைின் மீதான இரண்டுநாள் விவாதம் இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்றத்தில் இடம்பெற உள்ளது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

வற் வரி திருத்தம் காரணமாக மக்கள் அதிக சுமைகளை சுமக்க நேரிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதாரம் ஸ்திரமடையும் போது வற் வரி திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் எனவும் கூறினார்.

இன்றைய முதல்நாள் விவாவதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, எமது ஆதரவு அரசாங்கத்துக்கு அவசியம் என்றால், எமக்கான கௌரவைத்தை முதலில் கொடுக்க வேண்டும்.

அமைதியாக கொழும்பில் நாம் முன்னெடுத்த போராட்டத்தின் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல்களை நடத்தினர்.

எம்மீது தாக்குதல்களை நடத்திவிட்டு நாடாளுமன்றில் எம்மிடம் ஆதரவு கோர வெட்கம் இல்லையா? என கேள்வியெழுப்புகிறோம்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினால் எமக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எதிர்க்கட்சிகள்மீது தாக்குதல்களை நடத்திவிட்டா ஆதரவு கோர வேண்டும்?.

எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்தான் கண்ணீர் புகைப்பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர். அதனை நாம் நன்றாக அவதானித்திருந்தோம்.

எதிர்க்கட்சித் தலைவரை இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்க எம்மிமுடன் இருந்த போது இவ்வாறு செய்யவில்லை. அறிவார்ந்தவர்களிடம் இருந்து விலகி தற்போது கீழ்த்தரமானவர்களுடன் இணைந்து கீழ்த்தரமான வேளைகளையே செய்கிறார்.

எம்முடன் இருந்த தருணத்தில் தேர்தலை உரிய காலத்தில் நடத்த குரல்கொடுத்தார். இன்று தேர்தல்களை ஒத்திவைக்கிறார்.”என்றார்.