நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் குறைபாடுகள் ; ஒத்துக்கொண்ட ஆளுங்கட்சி: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Short Story

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் குறைபாடுகள் ; ஒத்துக்கொண்ட ஆளுங்கட்சி

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தேவையான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து விவாதிக்கத் தயார் எனவும் அவர் கூறினார்.

தென்னாப்பிரிக்காவுடனான 2 ஆவது டெஸ்ட்டில் டெரில் மிட்செல் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து டெரில் மிட்செல் விலகியுள்ளார். நீண்ட காலமாக காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார்.

OruvanOruvan

Daryl Mitchell will be sidelined to rehabilitate an ongoing foot injury

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி - ஐ.ம.ச. குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

6 கிராம் ஹெரோயினுடன் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை

06 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் கைதான நபருக்கு கொழும்பு,‍ மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் குறைகள் இருக்கின்றன-நீதியமைச்சர்

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் சில குறைகள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அதற்கு தேவையான திருத்தங்கள் செய்தால், அது பற்றி கலந்துரையாட தயார் எனவும் நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசின் நலன்புரி கொடுப்பனவு அதிகரிப்பு

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவுகள் 2024 ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

  • சிறுநீரக நோயாளிகள் - ரூ. 7,500 (முன்புரூ. 5,000)

  • மாற்றுத்திறனாளிகள் - ரூ. 7,500 (முன்பு ரூ. 5,000)

  • முதியோர் - ரூ. 3,000 (முன்பு ரூ. 2,000)

இலங்கை வந்தடைந்த மாலைதீவு பாதுகாப்பு படை பிரதானி

மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவையும் இராணுவத் தளபதியையும் இன்று சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாட்டியின் 14 லட்சம் ரூபாவை திருடிய 14 வயதான பேரன் கைது

காலி, தொடங்கொட பெப்பிலியவல பிரதேசத்தில் தனது பாட்டி தலையணைக்கு கீழ் மறைத்து வைத்திருந்த 14 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட 14 வயது மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் பேரனை தாம் கைது செய்ததாக தொடங்கொட பொலிஸார் கூறியுள்ளனர்.

தெனியாய ஆதார வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள்

தெனியாய ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் விசேட மயக்க மருந்து நிபுணர் வெளிநாடு சென்ற காரணத்தினால் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெனியாய ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அதியட்சகர் ரந்தீவ் அபேவிக்ரம தெரிவித்தார்.

தாயகத்தை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்

பிரான்ஸில் இருந்து லீ ஜெகியுஷ் (Le Jacques) என்ற அதிசொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 130 சுற்றுலாப்பயணிகள், 120 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதுடன் இன்று மதியம் குறித்த கப்பல் தாய்லாந்தை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு ஹெரோயினை விற்றவர் கைது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் போதைப் பொருளுக்கு அடிமையான ஊழியர்களுக்கு ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த கிம்புலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான நபரை கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர.

சிறைக்காவலர் மீது கைதி தாக்குதல்

வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தாக்கியதாகல் சிறைக்காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலினால் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

பெலியத்த சம்பவம்; மற்றுமோர் சந்தேக நபர் கைது

பெலியத்த ஐவர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபர் பெலியத்த பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 308.49 ரூபாவாகவும், 318.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

OruvanOruvan

Today’s CBSL official exchange rates

இங்கிலாந்துடனான 3, 4 ஆவது போட்டியிலும் கோலி விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடைபெறும் மூன்று, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரம் விராட் கோலி விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 7 முதல் தர்மசாலாவில் தொடங்கும் 5 ஆவது டெஸ்டியிலும் கோலி விளைாயடுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

OruvanOruvan

Virat Kohli

பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக மருத்துவர் கைது

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக மருத்துவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் வைத்தியர் மற்றும் அவ்வேளையில் கடமையில் இருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்

எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

தன்னை கண்டதும் தொலைபேசியை துண்டித்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன்

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உயன்கெலே வீதி,தொம்பகஹவத்த பிரதேசத்தில் நேற்றிரவு வீட்டில் 47 வயதான பெண் தனியறையில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததுடன் திடீரென கணவன், அறைக்குள் வந்ததும்,தொலைபேசியை துண்டித்தால், ஆத்திரமடைந்த கணவன், கத்தியால் தலையில் தாக்கியத்தில் காயமடைந்த அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை-ஐ.ம.ச

கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிக்கும் மற்றும் கட்சியின் கூட்டுத்தீர்மானங்களை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் இல்லையென்றால், கட்சியின் கட்டுப்பாடு பாதிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

24 மணிநேரத்தில் 728 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 558 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 170 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கு விஷம் கலந்த பால் பக்கெட்டை வழங்கிய சம்பவம் தொடர்பில் கொழும்பு, ஆட்டுப்பட்டித் தொரு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் கும்பலுடன் தொடர்புடைய பொலிஸார் அடையாளம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிராக பாராபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பிக்கு சுட்டுக்கொலை ; சந்தேகநபர் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி காலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல் அமைச்சு

சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வீதி விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

மித்தெனிய - வலஸ்முல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 17 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவர் தனது இரு நண்பர்களுடன் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாது.

சனத் நிஷாந்தவுக்குப் பதிலாக பதவியேற்ற ஜகத் பிரியங்கர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜகத் பிரியங்கர இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தவறான மருந்தின் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளைஞன்

கராப்பிட்டியில் உள்ள விசேட வைத்தியர் சிகிச்சைப் பிரிவினால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை தவறாக வழங்கியமையினால் 17 வயதுடைய இளைஞனின் நிலை மோசமடைந்துள்ளது. பிறவியில் இருந்தே, வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த இளைஞர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்பு - 728 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 728 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 558 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 170 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 728 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நெடுந்தீவுக்குள் அத்துமீறி நுழைந்த மீனவர்கள் கைது

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த ஜனாதிபதி

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி 07 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதுடன், முக்கிய உரையினையும் ஆற்றவுள்ளார்.

காம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை அரிசி

இலங்கையின் அரிசியை காம்பியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான இருதரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் காம்பிய தூதுவர் முஸ்தபா ஜவாரா (Mustapha Jawara) ஆகியோர் கலந்துரையாடி உள்ளனர்.

இறைவரி திணைக்களத்தின் பேரில் பண மோசடி

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துனர் அடையாள இலக்கத்துடன் (TIN) தொடர்புடைய வங்கிச்சேவை எனக்கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலொன்று இயங்கி வருகிறது. இந்த மோசடியாளர்களிடம் சிக்கி பல இலட்சம் பெறுமதியான பணத்தினை இழந்தவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குருநாகல் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.