மீன்பிடிப் படகில் இருந்து விசவாயு கசிவு - ஒருவர் பலி: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்

OruvanOruvan

Short Story 07.02.2024

மீன்பிடிப் படகில் இருந்து விசவாயு கசிவு - ஒருவர் பலி

அம்பலாங்கொடை, மீன்பிடித்துறைமுகத்தில் இன்று காலை ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றில் இருந்து விசவாயு கசிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் போது அதன் அருகில் நின்ற எட்டு மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி, பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

முச்சக்கர வண்டியை தூக்கிச் சென்றதால் நான்கு பிள்ளைகளின் தந்தை தற்கொலை

பொருளாதார நெருக்கடி காரணமாக லீசிங் தவணைக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் முச்சக்கர வண்டி பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குஜராத் மாநில முதலமைச்சருடன் ஜேவிபி சந்திப்பு

இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று புதன்கிழமை (07) குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபெந்திரபாய் பட்டேளுடன் (Bhupendrabhai Patel) சந்திப்பினை மேற்கொண்டார்கள். மாநிலத்தில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கான அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் மற்றும் மாநில நிருவாகச் செயற்பாங்கு சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

OruvanOruvan

விஷ வாயுவை சுவாசித்த மீனவர் பலி, மேலும் 7 பேர் வைத்தியசாலையில்

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் மீன் தொட்டிக்குள் விஷ வாயுவை சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், விஷ வாயுவை சுவாசித்த மேலும் 07 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று புதன்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முற‍ையே 308.56 ரூபாவாகவும், 318.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

OruvanOruvan

Today’s CBSL official exchange rates

நீரில் மூழ்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி பலி

பேருவளை, மொரகல்ல கடற் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 71 வயதான ருமேனிய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை

நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 517 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 4,491 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு

2024 ஜனவரி மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.3% அதிகரிப்பை பதிவு செய்து 4,491 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் 4,392 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்பட்ட செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் பூதவுடல்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண மின்சார சபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.62 ஊழியர்களை பணி நீக்கம் செய்தமை, ஊழியர்களின் இடமாற்றம், மின்பட்டியல் விலை அதிகரிப்பு, சம்பள முரண்பாடு போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி முன்னெடுத்திருந்தனர்.

இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரிய தொழிற்சாலையில் தீ விபத்து

இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரியாவின் நாசு பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு தொழிற்புரிவதாகவும், தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராகவும் நுவரெலியா இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதன் கிழமை (07) மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவலோகிதேஸ்வர போதிசத்வாவுக்கு பிணை

"அவலோகிதேஸ்வர போதிசத்வா" என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்குவை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த தமிழ் குடும்பம்

இலங்கை மன்னாரை சேர்ந்த ஐந்து பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாகத் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் குறித்த ஐந்து பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மீனவர்கள் ஆறு பேர் விடுதலை

இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜனவரி 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படை தளபதி

இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படை தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற தயா சண்டகிரி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தனது அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

OruvanOruvan

நாட்டை வந்தடைந்த ஈரானில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரேன் நெத்தசிங்க

ஈரானில் நடைபெற்ற 32 ஆவது சர்வதேச பூப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் திறந்த ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் வீரேன் நெத்தசிங்க நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

OruvanOruvan

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 785 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 128 கிராம் ஹெரோயின், 115 கிராம் ஐஸ், 8.6 கிலோ கஞ்சா மற்றும் 138,676 கஞ்சா செடிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

ஒன்பதாவது நாடாளுமன்றதின் ஐந்தாவது அமர்வு சற்று முன்னர் சபாநாயக்கர் தலைமையில் ஆரம்பமானது..ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். அரசாங்கத்தின் கொள்ளை பிரகடனத்தை ஜனாதிபதி சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.நாடாளுமன்ற அமர்வை எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

பெலியத்தை படுகொலை மேலும் ஒருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை 11 சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்.

இன்றைய வானிலை

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

50 வெதுப்பகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 வெதுப்பகங்கள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த வெதுப்பகங்களுக்க எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 317.6567 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.7464 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வாம் என்கின்றார் வியாழேந்திரன்

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையில் நீதிமன்ற தீர்ப்பினையே நடைமுறைப்படுத்தமுடியாத நிலைமையே இருந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளதுடன், பிரச்சினைக்கு எதிர்வரும் 13ம் திகதி இந்த பிரச்சினைக்கு மாவட்ட அபிவித்திக்குழு கூட்டத்தில் தீர்வு காண தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஒளிபரப்பு இணையத்தளம் அறிமுகம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன், முதல்தடவையாக பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக இந்தப் பட்டமளிப்பு விழா – நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.