திருமலையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது: வடக்கு கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

North - East News updates 07.02.2024

கிழக்கு மாகாண மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண மின்சார சபையின் ஊழியர்கள் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அரசாங்கத்துக்கு எதிராக குரல் எழுப்பியதாக தெரிவித்து 62 ஊழியர்கள் பணிநீக்கம் செய்தமை, ஊழியர் இடமாற்றம், சம்பள முரண்பாடு போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

திருமலையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்

கச்சத்தீவு திருவிழாவிற்காக ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினர் முழுவீச்சில் முன்னெடுத்து வருகின்றனர். வருடாந்த கச்சத்தீவு பெருதிருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் கச்சத்தீவில் நடைபெறவுள்ளது.

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த மூவர் டிப்பருடன் கைது

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைதான மூவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.