நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய மறுப்பு: தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான ஆவணங்களும் ஆய்வுக்கு

OruvanOruvan

Kehalia Rambukwella

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்புரை ஆற்றுகின்றார். இந்த அமர்வில் பங்கு கொள்ளவே கெஹலிய மறுத்துள்ளார்.

தரமற்ற மருந்து இறக்குமதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும், சிறை காவலர்களின் பாதுகாப்புடன் கெஹலிய நாடாளுமன்றம் செல்ல முடியும். ஆனால், அவ்வாறு நாடாளுமன்றம் செல்வதற்கு அவர் மறுத்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததற்கான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கெஹலிய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மறுப்பு வெளியிட்டுள்ளார்.