ஐ.ம.முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி: செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம்

OruvanOruvan

Former President Chandrika Bandaranayke Kumaratunga

ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பரந்த கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளது. ஒரே குடையின் கீழ் ஓரணியாக போட்டியிடவுள்ளது.

சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர் என்பதுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீள புனரமைக்கும் முயற்சியிலும் கட்சியை மையப்படுத்திய புதிய அரசாங்கத்தை அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.