ஈழத்து கலைஞர்கள் உருவாக்கிய “விலகாதே” காணொளி பாடல்: காதலர்கள் தினத்துக்கு வெளியீடு

OruvanOruvan

"Vilagathey" video song created by sri lankan artists

காதலர் தின வெளியீடாக “விலகாதே..” என்ற காதல் பாடல் வெளிவரவுள்ளது.

ஈழத்து கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள இந்த காணொளிப்பாடல், காதலர் தினத்தை சிறப்பிக்க பெப்ரவரி 13ம் திகதி காலை 10.00 மணியளவில் VK Brothers வலையொளிப் பக்கத்தில் வெளியிப்படவுள்ளது.

Dilu_Entertainment தயாரிப்பில், வினோத்தின் இயக்கம் மற்றும் அவரது பாடல்வரிகளில் வெற்றிசிந்துஜன் இசையில் இப்பாடல் வெளியாகியுள்ளது.

வெற்றி சிந்துஜன் இணைந்து இப்பாடலை டிலாணி மற்றும் சொல்லிசை பகுதியை வினோத்தும் பாடியுள்ளார்.

டிலக்சன், கௌசல்யா, வினோத் ஆகியோர் இதில் நடித்துள்ளதுடன், இதனை VM Film Makers நிறுவனம் உருவாக்கியுள்ளது. அத்துடன் விதுசனது ஒளிப்பதிவிலும் சிந்துஜன் படத்தொகுப்பு மற்றும் VFX வேலைகளை கவனித்துள்ளார்.

வயலின் இசையினை வேலதீபன் வழங்கியுள்ளதுடன் பாடல் ஒலிக்கலவையை சுதர்சன் மேற்கொண்டுள்ளார்.