மின் ஒழுக்கினால் எரிந்து நாசமான தும்புத் தொழிற்சாலை: வடக்கு கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

Nort & East News

மின் ஒழுக்கினால் எரிந்து நாசமான தும்புத் தொழிற்சாலை

கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக 35 இலட்சத்துக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ஏற்பட்ட மின் ஒழுக்கினை சீரான முறயைில் திருத்தப்படாமலே இந்த மின் ஒழுக்கு ஏற்பட காரணம் என தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபரை இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட கள்ளியடி பாடசாலையின் மாணவர்கள்,பெற்றோர் இணைந்து இன்றைய தினம் போராட்டமொன்ளை மேற்கொண்டிருந்தனர். ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அதிபர் இடமாற்றம் ஆகியவற்றை கண்டித்தே இந்த போராட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவனுக்கு சரீரப் பிணை

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவனை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாது, மாணவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இன்று சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் எம்.கே.முகமட் கில்மி உத்தரவிட்டார்.

இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டத்தில் குதித்த சாவல்கட்டு மீனவர்கள்

இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் - சாவல்கட்டு மீனவர்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், எதிர்வரும் 8ம் திகதி ஆளுநரை சந்திக்கமுடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் மீனவர்களுக்கு அறிவுருத்தியதை தொடர்ந்து போராட்டம் நிறுத்தப்பட்டது.

மாணவர்கள் மீதான பொலிஸ் வன்முறைகள்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்

கிளிநொச்சியில் அநீதிகளை எதிர்த்தும், உரிமைகளைக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களும், பொது மக்களும் மேற்கொண்ட போராட்டத்தினை பொலிஸார் வன்முறை மூலம் நசுக்க முற்பட்ட செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

14 மாதக் குழந்தை காய்ச்சலினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் 14 மாதங்களேயான குழந்தை காய்ச்சலினால் உயிரிழந்துள்ளது.உயிரிழந்த குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிச்சை பலனின்றி உயிரிழந்தது. சாவகச்சேரி- இத்தியடி பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.