தரமற்ற மருந்துக் கொள்வனவு: விசாரணையின் பின் கெஹலிய பதவி விலகினார்

OruvanOruvan

சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை அதிக விலையில் இலங்கைக்கு கொள்வனவு செய்ய அனுமதியளித்த குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹலிய கடந்த 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், அவரை பெப்ரவரி 15ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைதுசெய்யப்பட்ட தினமே கெஹெலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊழல் - மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையில் தொடர்ந்து வைத்திருப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், கெஹலியவை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் அழுத்தம் கொடுத்தன.

இந்த நிலையிலேயே தமது இராஜினாமா கடிதத்தை கெஹலிய ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவித்தன.