அனுரகுமாரவின் விஜயம் குறித்து விவாதங்களை உருவாக்கியுள்ள ஊடகங்கள்: இலங்கை மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை இந்தியா எவ்வாறு புரிந்துக்கொள்கிறது

OruvanOruvan

Indian National Security Adviser Ajith Doval and Anurakumar Dissanayake MP

இந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட பிரதிநிதிகளுக்கும், இந்திய அரசின் உயர் மட்டத் தலைவர்களுக்கும் இடையில் நடந்துள்ள பேச்சுவாரத்தை தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் சில விவாதங்களை உருவாக்கியுள்ளன.

இலங்கையின் மக்களின் நிலைப்பாடுகளை இந்தியா எவ்வாறு புரிந்துக்கொள்கிறது என்பதை இந்த விஜயம் காட்டுவதாக இந்தியாவின் பிரதான ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

புதுடெல்லியின் அழைப்பின் பேரில் இலங்கையின் இடதுசாரி அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த பயணத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் சந்தித்தது பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இது இலங்கையின் எதிர்க்கட்சி அரசியல்வாதியுடனான இந்திய அரசின் உயர் மட்ட ஈடுபாட்டை காட்டுவதாகவும் இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், 5 நாட்கள் இந்தியாவில் தங்கியிருப்பதுடன் புதுடெல்லி, அஹமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்கின்றனர்.

இந்த வருடம் இலங்கையில் தீர்மானகரமான தேர்தல் வருடமாக இருக்கும் நிலையில், உள்நாட்டில் அனுரகுமாரவுக்கு கிடைத்துள்ள உயர் மட்ட அரசியல் செல்வாக்கின் பின்னணியில் அவரது இந்திய விஜயமானது முக்கியமானது என இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒருவருக்கு புது டெல்லி அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அனுகுமார திஸாநாயக்கவை சந்தித்த பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“இன்று காலை இலங்கையின் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தமை மகிழ்ச்சிக்குரியது.

எமது இருத்தரப்பு தொடர்புகள் மற்றும் அதனை மேலும் அதிகரிப்பதன் மூலம் கிடைக்கும் பிரதிபலன்கள் தொடர்பாக சிறந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இலங்கை பொருளாதார சவால்கள் மற்றும் எதிர்கால பயணம் தொடர்பாகவும் பேசினோம்.

Neighbourhood First மற்றும் SAGAR கொள்கை மூல் இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய நண்பனாகவும் நம்பிக்கையான கூட்டாளியாகவும் இருக்கும்” எனக்கூறியிருந்தார்.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர் விஜித ஹேரத்,

“இந்திய மற்றும் இலங்கை சம்பந்தமான பிராந்திய பாதுகாப்பு குறித்து, இருத்தரப்பு சிக்கல்கள் சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் இந்தியாவின் விஸ்தரிப்புவாத்தை கடுமையான எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை தொடர்பில் அக்கறை காட்டும் பல்வேறு சர்வதேச தரப்புகளுடன் சம்பந்தப்பட்டு செயற்பட தயாராகி, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள விதத்தை தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது என இந்து பத்திரிகை கூறியுள்ளது.

இந்தியாவின் புதுடெல்லி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கியுள்ள இந்த உபசரிப்பானது இலங்கையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.

அதன் பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியுடன் இலங்கையின் இரண்டு பிரதான அரசியல் அணிகள் மீது விரக்தியடைந்துள்ள பெரும்பாலான மக்கள், மூன்றாவது கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கு இம்முறை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை வழங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், அனுரகுமாரவின் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

XX

Indian External Affairs Minister S. Jaishankar and Anurakumara Dissanayake MP X

இலங்கையில் பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகள் மூலம் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதும் அனுரகுமார திஸாநாயக்கவின் செல்வாக்கு தெளிவாக அதிகரித்து இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது என இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவதானித்தே மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு இந்தியாவுக்கான இந்த விஜயத்தை கிடைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலத்தில் கொண்டிருந்த கடுமையான இந்திய எதிர்ப்பு கொள்கையை சுட்டிக்காட்டி டைம்ஸ் ஒப் இந்தியா கூறியுள்ளது.

“இலங்கையின் மாக்ஸிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தனது பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அங்கமான இந்த கட்சி குறிப்பிடத்தக்களளவு மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டுள்ளதுடன் அதனை அனுரகுமார திஸாநாயக்க வழிநடத்தி வருகின்றார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு இலஙகையில் இந்திய எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபட்ட வரலாறும் இருப்பதாக டைம்ஸ் ஒப் இந்தியா தனது செய்தியில் கூறியுள்ளது.

இலங்கை மக்கள் அரசியல் நாடித்துடிப்பை புரிந்துக்கொண்டே இந்தியாவின் புதுடெல்லி அரசாங்கம் இந்த அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் இந்த இந்திய விஜயத்தில் அனுரகுமார திஸாநாயக்கவுடன் அதன் பொதுச் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோருடம் இடம்பெற்றுள்ளனர்.