ஈழத்து இளைஞர்களின் புதிய முயற்சி: யாழில் ஆரம்பமாகும் பயணம் (காணொளி)

OruvanOruvan

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரும் புதிய முயற்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சுற்றுலா பயணமானது யாழ்ப்பாணம், பருத்தித்துறை - சக்கோடை முனையிலிருந்து நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்ச்சியடைய செய்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் வரவழைத்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த சுற்றுலாப் பயணத்தினை ஆரம்பித்துள்ளதாக இம்முயற்சியை மேற்கொண்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.