புதிய கட்சியை தொடங்கினார் சரத் பொன்சேகா: சஜித் தரப்பு பிளவுப்படும் சாத்தியம்

OruvanOruvan

Field Marshal Sarath Fonseka

ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி மூன்றாம் திகதி உருவாக்கப்பட்டது.

இந்த முகநூல் பக்கத்தில் 2024ஆம் ஆண்டிற்கான சரத் பொன்சேகா என்ற பதிவுகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முன்னேற்றத்திற்கு கட்சி பேதமின்றி தேசிய வளர்ச்சிக் கொள்கைகளின்படி நடக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமைக்கு சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அத்துடன், அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக் கொண்டால், கோட்டாபய ராஜபக்சவையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள நிலையில், அந்தக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கட்சி விரைவில் பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.