அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் திருத்தம்: நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு

OruvanOruvan

Lanka sathosa

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை திருத்தி நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது

நுகர்வோர் அதிக இலாபம் ஈட்டும் வகையிலான விற்பனையாளரிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வழிகாட்டியாக ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை வரம்புகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,

மொத்த விற்பனை விலையை நிலையான விலையாகவும், சில்லறை விலை வரம்பாகவும் அறிவிக்கப்பட்டதால், சில்லறை விற்பனையாளரும் நுகர்வோரும் பொருட்களை வாங்குவதற்கு முன் மிகவும் வசதியான இடத்தில் இருந்து கொள்முதல் செய்யலாம்.

இதன்படி, செத்தல் மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலி, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

செத்தல் மிளகாய் மொத்த விலை கிலோ ரூ.870 ஆகவும், வெள்ளை சீனி கிலோ ரூ.265 ஆகவும், இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ ரூ.900 ஆகவும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.320 ஆகவும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.120 ஆகவும், பருப்பு கிலோ ரூ.295 ஆகவும் உள்ளது.

ஒரு கிலோ செத்தல் மிளகாய் 950 முதல் 1200 ரூபா வரையிலும், ஒரு கிலோ வெள்ளை சீனி 280 முதல் 310 ரூபா வரையிலும், நெத்தலி கிலோ 1050 முதல் 1400 ரூபா வரையிலும், வெங்காயம் ஒரு கிலோ 360 முதல் 420 ரூபா வரையிலும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 180 முதல் 250 ரூபாயாகவும், பருப்பு கிலோ 310 ரூபாயாகவும் உள்ளது.

சில்லறை விற்பனை விலை 380 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.