நவகமுவயில் கோடிஸ்வர வர்த்தகர் ஒருவருக்கு அச்சுறுத்தல்: வீட்டின் முன் மலர் வளையம், பலத்த பொலிஸ் பாதுகாப்பு
நவகமுவ பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருக்கு பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல் விடுத்துள்ளதையடுத்து அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் பாதாள உலகக்கும்பல் குற்றவாளி ஒருவர் தொலைபேசி இலக்கத்துடன் மலர் வளையம் வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
வர்த்தகரின் வீட்டுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.