இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று: பொது மக்களுக்கு அனுமதி இல்லை

OruvanOruvan

National day Sri Lanka

சுதந்திர நிகழ்வுகள் நிறைவு

ஜாதி, மத, குல பேதங்களை மறந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற வகையில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் 76 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நிறைவடைந்தன.

கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பம்

இலங்கையின் அனைத்து சமூகத்தினரையும் பிரதிபலிக்கும் வகையில் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. சிங்கள, தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் நடன மற்றும் சங்கீத நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

பாராசூட் சாகசம்

சுதந்திர தின நிகழ்வின் ஒரு அங்கமாக பாராசூட் சாகசம் இடம்பெற்றது. சுமார் 7000 ஆதி உயரத்தில் இருந்து இந்த சாகசம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து பாராசூட் சாகச வீரர்கள் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்தை பெற்று விடைபெற்று சென்றனர்.

அணிவகுப்புகள் ஆரம்பம்

இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிகரிப்பதை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய கெடெட் படையணி என்பன ஒன்றிணைந்து அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளன.

தொடர்ந்து முப்படையினரும் இணைந்துகொண்டனர்.

தேசிய கோடி ஏற்றப்பட்டது

முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரினால் ஜனாதிபதி கொடிக்கம்பத்திற் அருகில் அழைத்துவரப்பட்டு தேசிய கோடி ஏற்றப்பட்டது.

இதன்போது கொழும்பை அண்மித்துள்ள பாடசாலைகளின் மாணவர்கள் 100 பேரின் பங்கேற்புடன் தேசிய கீதம் பாடப்பட்டது.

ஜனாதிபதி வருகை

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க வருகைதந்துள்ளனர்.

தாய்லாந்து பிரதமர் வருகை

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் நிகழ்விடத்திற்கு வருகை தந்துள்ளார்.

76 ஆவது சுதந்திர தினம் இன்று

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையின் இன்று சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

காலிமுகத்திடலில் 'புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தாய்லாந்து பிரதமர் பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார்.

இந்த நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு இம்முறை பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.