மட்டக்களப்பில் கரிநாள் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு: வடக்கு கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

North and East news

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவருக்கு எதிராக தடை உத்தரவு

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் 5 பேருக்கு எதிராக பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இரணைமடு சந்தியில் 9 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் கரிநாள் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த 17 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு இரவோடு இரவாக பொலிஸாரினால் உரியவர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய ஆர்பாட்ட பேரணிக்குஎ ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த நிலையிலேயெ குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.