எதிர்வரும் 7 ஆம் திகதி கூடும் பாராளுமன்றம்: கட்சித் தாவல்கள் நடைபெறலாம் என தகவல்

OruvanOruvan

Sri Lanka Parliament

இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது.

இதன் போது, அரசியல் கட்சித் தாவல்கள் நடைபெறலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம் ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமான தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய பின்னர், அதனை ஆதரிப்பதாக கூறி இந்த கட்சி தாவல்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி தாவல் தொடர்பாக எதிர்க்கட்சியில் இருக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசியமான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும் எதிர்க்கட்சியில் இருந்து எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளனர், அவர்கள் எந்த கட்சியின் உறுப்பினர்கள் என்ற விபரங்கள் தெரியவரவில்லை.

எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்களான இரண் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைகளை இரகசியமாக முறையில் ஒருங்கிணைப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது.