வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு: பெண்கள் குழுவொன்று போராட்டம்

OruvanOruvan

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது

சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்றைய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம் தெற்கிலும் மாத்தறையில் பெண்கள் குழுவொன்று சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகள், பொதுமக்கள் மீதான வரிச்சுமை மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பவற்றிற்கு எதிராக இவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது