இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்த: வெளியான வர்த்தமானி அறிவித்தல்

OruvanOruvan

Lohan Radwatta

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார்.

ஜனவரி 29ஆம் திகதி இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

இவரது பதவி விலகல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பி.ஏக்கநாயக்க அரச வர்த்தமானியில் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் லொஹான் ரத்வத்த மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றிருந்த போது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்தநிலையில், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனவரி 29 ஆம் திகதி பதவியேற்றிருந்தார்.

லொஹான் ரத்வத்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மகனாவார்.

லொஹான் ரத்வத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.