இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில்: 5 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும்

OruvanOruvan

Indian Navy Submarine 'INS Karanj'

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டார் அருணாப் கடமையாற்றுகிறார்.

இந்த நீர்மூழ்கி கப்பலில் 53 கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நாட்டில் உள்ள முக்கியமான இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு விசேட விளக்கமளிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இந்திய கடற்படையின் இந்த நீர்மூழ்கி கப்பல் எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

OruvanOruvan

Indian Navy Submarine 'INS Karanj'

OruvanOruvan

Indian Navy Submarine 'INS Karanj'