நாளை முக்கிய ரயில் நிலையங்களில் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

Daily news in 40 words

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரையோரப் பாதையில் இயங்கும் புகையிரதங்கள் நாளை (04) முக்கிய ரயில் நிலையங்கள் சிலவற்றில் நிறுத்தப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிந்துரையின் பேரிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆப்கானுடான டெஸ்ட் போட்டி; 416 ஓட்டங்களுடன் இலங்கை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 416 ஓட்டங்களுடன் இலங்கை. அஞ்சலோ மெத்தியூஸ் (141), தினேஷ் சந்திமால் (107) சதம். 212 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை. நாளை மூன்றாம் நாள்.

OruvanOruvan

Lions! The scoreboard reading 410/6 at stumps - a lead of 212 against Afghanistan

ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு 195 மில்லியன் ரூபா இலாபம்

இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டில் 195 மில்லியன் ரூபா இலாபத்தை சம்பாதித்துள்ளதாகவும் 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் கிடைத்த மிகப் பெரிய இலாபம் எனவும் ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 10 லட்சம் மூலிகை செடிகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (03) கைச்சாத்திடப்பட்டது. தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது.

OruvanOruvan

பிரபல ஹொலிவூட் நடிகர் கார்ல் வெதர்ஸ் காலமானார்

'ராக்கி' புகழ் பிரபல ஹொலிவூட் நடிகரான கார்ல் வெதர்ஸை வெள்ளிக்கிழமை (02) தனது 76 ஆவது வயதில் காலமானார். ராக்கி திரைப்படத்தின் முதல் நான்கு பாகங்களில் கார்ல் வெதர்ஸ் "அப்பல்லோ க்ரீட்" என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Sylvester Stallone and Carl Weathers

சேவையில் இருந்து விலகிய பதுளை பஸ் டிப்போ ஊழியர்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை பஸ் டிப்போ ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர். பதுளை பஸ் டிப்போ ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சுதந்திர தினத்தை கருத்திற் கொண்டு கடலோர மார்க்கமான ரயில் சேவைகள் நாளை (04) பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட மாட்டாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்துகமவை அதிர வைத்த கொலை சம்பவம்

மத்துகம ஓவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரை இன்று காலை இனந்தெரியாத குழுவினர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ அதிகாரி கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

இராணுவ கோப்ரல் ஒருவரை மினுவங்கொடை,நில்பனாகொட மைதானத்திற்கு அருகில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்தார் எனக்கூறப்படும் நபரை மினுவங்கொடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 28 வயதான சந்தேக நபர், போதைப் பொருளுக்கு அடிமையானர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

10 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதை மாத்திரையுடன் 40 வயதுடைய ஒருவர் வத்தளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது 150 மில்லிகிராம் அளவுள்ள Pregab (PREGAB) 192,000 மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கடமையில் களமிறக்கும் 5,550 பொலிஸார்

76 ஆவது தேசிய சுதந்திர விழாவில் போக்குவரத்து கடமைகளுக்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்களும், பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4000 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் முன்னிலையாகும் கெஹெலிய ரம்புக்வெல்ல

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமாருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.மாளிகாகந்த நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்துக்கு 195 மில்லியன் இலாபம்

கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆயுர்வேத கூட்டுத்தாபனம் 195 மில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றுள்ளதாக சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் நட்டத்தை சந்தித்த ஆயுர்வேத கூட்டுத்தாபனம் 2023 இல் 195 மில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ளது.

இன்றைய வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.