காதலர் தினத்தில் ரணிலைச் சந்திக்க வரும் தேரர்: கண்ணீர் புகை வேண்டாம், வீண் செலவுகளை குறையுங்கள்

OruvanOruvan

Ranil wickremesinghe

எதிர்வரும் பெப்ரவரி 14ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக மிஹிந்தலை விகாரையின் சங்கைக்குரிய வளவாஹெங்குணாவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி தம்மரதன தேரர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் என்பதும் இதிலுள்ள விசேட அம்சமாகும்.

பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வரும் அவரை வரவேற்க கண்ணீர் புகையோ அல்லது நீர்த்தாரையோ கொண்டு விரட்டியடிக்க முயலாமல், கலந்துரையாடலுக்கு தயாராகுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் அதிக வரி விதிப்பினால் மக்கள் நசுக்கப்பட்டு ஆட்சியாளர்கள் சுகபோகங்களை அனுபவிக்கும் நிலை காணப்படுவதாகவும், அரசின் வீண் செலவுகளை தடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்தும் கோரிக்கை வைத்துள்ளார்

அத்துடன் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் மக்களையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.