இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்தாலும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை: அரசாங்கம் அணிசேரா கொள்கையில் இருந்து விலகியுள்ளது

OruvanOruvan

Prof. Tissa Vitharana MP

இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு அரசியல் ரீதியான சுதந்திரம் கிடைத்த போதிலும் பொருளாதர ரீதியான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் அணிசேரா கொள்கையில் இருந்து விலகி, அமெரிக்க சார்பு கொள்கையை நோக்கி நாட்டை கொண்டு செல்வதாகவும் லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்தை வெளிநாடுகள் சுரண்ட இடமளிக்காது, உண்மையான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டுக்கு தேவையாற்றை நாட்டுக்குள் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரத்தை பெற்றுக்கொண்டாலும் பிரித்தானியாவின் ஆளுகைக்குள் கீழ் இருந்த நாட்டை மீட்பதற்காக என்.எம்.பெரேரா,கொல்வின் ஆர்.டி.சில்வா,லெஸ்லி பீரிஸ் போன்ற லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் சிறைக்கு சென்றனர்.

இறுதியாக 1972 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இலங்கையை குடியரசாக மாற்றும் வரை எமது கட்சியின் தலைவர்கள் பங்களிப்புகளை வழங்கினர்.

முதலாளித்துவ பொருளாதார முறையானது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் கையாண்டு வந்த பொருளாதார முறையின் கீழ் விரிவடைந்தது.

குறிப்பாக தேயிலை, இறப்பர் போன்ற வணிக பயிர்செய்கைகள் பிரதானமாக பிரித்தானிய முதலாளித்துவ வகுப்பினரிடம் இருந்தது. உணவு பயிர்கள் மற்றும் சிறுத்தொழில்கள் தேசிய முதலாளித்துவ வகுப்பினரிடம் இருந்தது.

பெருந்தோட்டங்களுக்கான தொழிலாளிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.தேசிய தொழிலாளர் வகுப்பும் படிப்படியாக விரிவடைந்தது.

தொழிலாளர் சட்டங்கள் மூலம் தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாத்து, நியாயமாக ஊதியத்தை வென்றெடுத்த தொழிலாளர் வகுப்புக்கான தொழிற்சங்க அமைப்பான லங்க சமசமாஜக்கட்சி முன்னேறியது எனவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.