ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவாக ஏகமனதாக தீர்மானம், வெற்றிக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை

OruvanOruvan

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட சம்மேளனம் இன்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார். எனவே அவரது வெற்றிக்காக உழைக்க அனைவரும் தயாராக வேண்டும்.

இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர், ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியான பாதைக்கு கொண்டு சென்று பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து மீண்டும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலில் அவரை வெல்ல வைக்க வேண்டும் என்றும் பாலித ரங்கே பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்

இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற விசேட தீர்மானம் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.