சுகாதார தொழிற்சங்க போராட்டம்: தற்காலிகமாக வாபஸ்

OruvanOruvan

Tri-forces personnel deployed to hospitals

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நாளை (03) காலை 06.30 மணியுடன் தற்காலிகமாக கைவிடுவதற்கு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (01) நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.

எவ்வாறெனினும், திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் அரசாங்கத்தின் சதி என்று குற்றம் சுமத்தி, வைத்தியர் சங்கங்களும் அகில இலங்கை தாதியர் சங்கமும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளன.

நாடளாவிய ரீதியிலான வேலைநிறுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு வசதியிலும் உள்ள தேவைகளைப் பொறுத்து, நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் முப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.