இணையத்தில் வைரலாகியுள்ள பாலியல் காணொளி: அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு முறைப்பாடு, விசாரணைகள் தீவிரம்

OruvanOruvan

இலங்கையில் சிறுமி ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக காணொளி இணையத்தில் பரவி வருவதாக அமெரிக்காவின் NCMEC இலங்கை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

ஒன்பது வயது சிறுமியின் காட்சிகளுடன் இணையத்தில் பரவிவரும் இந்த காணொளி உண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்ட காணொளியா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கையில் உள்ள சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருமாறு சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான காணொளி காட்சிகள் அடங்கிய அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதவான், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கூறி விசாரணைக்கு அனுமதி வழங்கினார்.