இலங்கையில் சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம்: வைத்தியசாலைகளில் களமிறங்கிய இராணுவத்தினர்

OruvanOruvan

Tri-forces personnel deployed to hospitals

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வதற்கு தீர்மானித்துள்ள.

அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காததால் இவ்வாறு வேலைநிறுத்தத்தை தொடர உள்ளதாகவும் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.72 தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

தொழிற்சற்க போராட்டம் தொடரும் பட்சத்தில் இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டும் எனவும் சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 35ஆயிரம் ரூபாவில் இருந்து 70ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டே சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தன.

இதனால் வைத்தியசாலைகளில் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டது. சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் இதனால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததுடன், கொழும்பில் வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவும் வகையில் முப்படையினர் பாதுகாப்பு அமைச்சு அழைக்கப்பு விடுத்திருந்தது.

நாடளாவிய ரீதியில் 22 வைத்தியசாலைகளின் சேவைகளை முன்னெடுப்பதற்கு 600 இற்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.