புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கிடைத்த பெரும் தொகை பணம்: இலங்கையில் அந்நிய செலாவணி அதிகரிப்பு

OruvanOruvan

US Dollar Photo credit - Getty Image

கடந்த வருடத்தில் புலம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து 8.9 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போதைக்கு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாகவே இந்நாட்டுக்கு கூடுதலான அந்நியச் செலாவணி கிடைத்து வருகின்றது.

அதற்கு மேலதிகமாக கொரியா வேலைவாய்ப்பின் மூலமாகவும் குறிப்பிடத்தக்க அளவு அந்நிய செலாவணியை இலங்கை ஈட்டி வருகின்றது.