தொழிற்சங்க நடவடிக்கை: இலங்கை தாதியர் சங்கம் விலகல்
தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து இன்று விலகத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாளைய தினம் தொடக்கம் சுகாதார சேவை சார்ந்த தொழிற்சங்கங்கள் தொடர் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகள் பீட மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதற்காக இன்று 31ஆம் திகதி பிற்பகல் கண்டிக்கு வருகை தந்திருந்தது.
சுகாதாரத்துறையில் உருவாகியுள்ள நெருக்கடிகள் குறித்து மகாநாயக்கரிடம் விளக்கமளிக்கும் மகஜரொன்றை கையளித்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அகில இலங்கை தாதியர் சங்க பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கருத்து வௌியிட்ட மகாநாயக்கர், : இன்று, சுகாதார வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். மற்ற துறைகளிலும் இதே நிலைதான்.
இவர்களை நாட்டிற்குள் வைத்திருக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் மீது சுமையில்லாமல் மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இன்று நாட்டின் அனைத்து துறைகளிலும் நெருக்கடிகள் காணப்படுகின்றன.
ஆனால், பொதுப்பணித்துறையினர் என்ற வகையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவராச்சி,
'சுகாதாரத்துறையில் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தத்தில் இருந்து விலகுவதற்கு தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அகில இலங்கை தாதியர் சங்கத்தின் கல்விச் செயலாளர் பிரபாத் பாலிபான, பொருளாளர் சுரேஷ் தௌலகல, கண்டி கிளைச் செயலாளர் துஷாரி சுமனரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.