‘2024‘ ஐசிசி பொதுச் சபை கூட்டம் கொழும்பில்: 40 சொற்களில் நாளாந்த செய்திகள்...

OruvanOruvan

‘2024‘ ஐசிசி பொதுச் சபை கூட்டம் கொழும்பில்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டத்தை கொழும்பில் நடத்தும் முயற்சியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஜூலை 19 முதல் 22 வரை கொழும்பில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைக்கும் ஜனாதிபதி

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி (புதன்கிழமை) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

OruvanOruvan

South Korean Ambassador Myeon Lee and Public Security Minister Tran Alas

பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தென் கொரிய தூதுவர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில்,பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்துவது, இலங்கையின் பொது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தென் கொரியாவின் உதவிகளை பெற்றுக்கொள்வது உட்பட இருத்தரப்பு சார்ந்த பல முக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவ வீரர் கததியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்

மினுவங்கொடை பொலிஸ் பிரிவில் நில்பனாகொட பிரதேசத்தில் இன்று முற்பகல், புத்தளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கத்தி குத்திக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பெப்ரவரி 04 மதுபானசாலைகளுக்கு பூட்டு

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 04, ஞாயிற்றுக்கிழமை அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜகிரியவில் மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம்

ராஜகிரிய மாதின்னாகொட பாலத்திற்கு அருகில் கிடந்த நிலையில் நேற்று காலை மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெலிகடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் சடலம் மீட்கப்படும் போது அது விலங்குகளால் கடித்து குதறப்பட்ட நிலையில் இருந்ததாகவும் சடலம காணப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கெமரா பதிவுகளை ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜனாதிபதிக்கும் மொட்டுக்கட்சியின் தலைவர்களுக்கும் இன்று நடைபெறும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு பெஜட் வீதியில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நடக்கும் இந்த சந்திப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கட்சியின் பொருளாளர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இன்று முதல் அமுலாகும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குறித்த சட்டம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கடந்த 27 ஆம் திகதி கையெழுத்திட இருந்த நிலையில், குறித்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

யுக்திய சுற்றியவளைப்பு - 649 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 878 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 649 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 229 சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் 878 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு பதவி உயர்வு

ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 2000 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலத்தில் விட அரசாங்கம் திட்டம்

உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சட்டமூலங்களில் கையெழுத்திட்ட சபாநாயகர்

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களுக்கான சான்றிதழுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒப்புதல் வழங்கியுள்ளார். மத்தியஸ்த சட்டமூலம் மற்றும் நோட்டரிகள் (திருத்தம்) சட்டமூலத்தின் விளைவாக சர்வதேச தீர்வு ஒப்பந்தங்களின் அங்கீகாரம் மற்றும் அமுலாக்கம் ஆகியவற்றுக்கு இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.