புதிய சட்டங்களை கொண்டு வருவதில் தவறில்லை: மல்வத்து மகாநாயக்க தேரர்

OruvanOruvan

Malwathu Mahanayake

சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வருவதில் தவறில்லை என்று மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று வியாழக்கிழமை மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போதே மகாநாயக்க தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களில் சில குழுக்கள் எந்த அடிப்படையும் இன்றி தன்னையும் அவதூறு செய்துள்ளன.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் அவற்றை சுதந்திரமாகப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது.

அரசியல் நோக்கமின்றி சமூக ஊடகங்களை அரசாங்கம் நெறிப்படுத்தினால், அதற்குரிய விதிமுறைகளை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்றும் கூறினார்.