ரணில் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தது நாட்டு மக்களின் அதிஷ்டம்: மீண்டும் ஒரு முறை தெரிவானால் நாடு புதிய பாதையில் செல்லும்

OruvanOruvan

UNPs Maskeliya Organizer KK Piyadasa

ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தது, நாட்டு மக்களின் அதிஷ்டம் எனவும் தற்போது எந்த தட்டுப்பாடும் இன்றி நாட்டு மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் மஸ்கெலிய தொகுதி அமைப்பாளர் கே.கே.பியதாசதெரிவித்துள்ளார்.

ஹட்டனில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் எரிபொருள் வரிசைகள், பால் மா வரிசைகள்,எரிவாயு வரிசைகள் காணப்பட்ட காலத்திலேயே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார்.

நாட்டை பொறுப்பேற்குமாறு கோரிய போது, தற்போது கோஷமிடும் எவரும் அப்போது நாட்டை பொறுப்பேற்கவில்லை. அன்று காணப்பட்ட சூழ்நிலையில், எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றி சவாலான சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்றார்.

எனினும் மனிதர்கள் மற்றும் அமானுஷ்யர்களுடன் தற்போது எமக்கு வேலை செய்ய நேரிட்டுள்ளது. இந்த அமானுஷ்யர்களையும் மனிதர்களாக மாற்றி முன்நோக்கி அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுதி மட்டத்தில் தலைவர்களை நியமித்து, அதன் மூலமாக மிகப் பெரிய ஒருங்கிணைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அடுத்து நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை மேலதிக வாக்குகளால் நாட்டின் ஜனாதிபதி தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்லவும் அதன் மூலம் நாட்டை பாரிய அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்லவும் முடியும் எனவும் கே.கே. பியதாச குறிப்பிட்டுள்ளார்.