இன்றும் தொடரும் அடையாள வேலை நிறுத்தம்: கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக குவிந்த ஊழியர்கள்

OruvanOruvan

Health workers Strike in Srilanka

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் கடமை இடைநிறுத்தம், வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் அல்லது DAT கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு கோரி இன்றும் தொழிற்சங்கங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதில் அரசாங்கமோ அல்லது நிதியமைச்சோ சாதகமான தலையீடு இல்லாததால், இன்று 72 சுகாதார சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.