மார்ச் முதல் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு இலவச மதிய உணவு: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - கல்வியமைச்சர்

OruvanOruvan

lunch free

2024 மார்ச் மாதம் முதல் தரம் 1-5 வரை உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு தினசரி இலவச மதியநேர உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இளம் மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 1.6 மில்லியன் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அரசாங்கம் இதற்காக 16 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை நேரங்களில் ஒவ்வொரு மாணவரும் போஷாக்கான உணவைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

மதிய உணவு வழங்குவதற்கான தினசரி ஒரு மாணவருக்கு 110 ரூபா ஒதுக்கீடு என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் கல்விச் செயல்திறனுக்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எதிர்வரும் கல்வியாண்டுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டிற்குத் தேவையான அனைத்துப் பாடசாலை பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு விநியோகத்திற்குத் தயாராக உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், மூன்றாம் தவணை முடிவடைந்தவுடன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.