மௌபிம ஜனதா கட்சியில் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க: சரத் பொன்சேகாவின் கடும் எதிர்ப்பு

OruvanOruvan

General Daya Ratnayake and Mawbima Janata Party leader Dilith Jayaweera

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்ட முன்னாள் இராணுவ தளபதி தயா கமகே இன்று காலை பொரள்ளையில் உள்ள மௌபிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று அந்த கட்சியின் தலைவரான திலித் ஜயவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க நேற்று முன்தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டதுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவருக்கு கட்சியில் ஆலோசகர் பதவி ஒன்றையும் வழங்கியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, தயா ரத்நாயக்கவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவரது இந்த விமர்சனம் காரணமாக அதிருப்தியடைந்துள்ள தயா ரத்நாயக்க, இன்று காலை மௌபிம ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு சென்று கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவுடன் கலந்துரையாடிய பின்னர் “மன்னித்துக்கொள்ளுங்கள்” எனக்கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்று முன்தினம் இணைந்துக்கொண்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துக்கொண்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.