எரிபொருள் விலை திருத்தம்: சிபெட்கோ, IOC ஐத் தொடர்ந்து விலைகளை மாற்றிய சினோபெக்

OruvanOruvan

Sinopec fuel price

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC ஆகியவற்றைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 368 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் குறைக்கப்பட்டு 456 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 360 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 468 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.