அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு: 10ஆம் திகதி முதல் விண்ணப்பிக்கலாம்

OruvanOruvan

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளிகளை மேலும் அதிகரிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

தற்போதைக்கு சுமார் 20 லட்சம் பயனாளிகள் அஸ்வெசும திட்டத்தின் பயன்களைப் பெற்றுவருகின்றனர்.

குறித்த எண்ணிக்கையை மேலும் நான்கு இலட்சத்தினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார் .

புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

ருவன்வெல்ல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளர்களை தெரிவு செய்வதில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், கடந்த காலங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறாத பயனாளர்கள் இந்த முறை விண்ணப்பிக்க முடியும் என்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.