இலங்கையில் இந்த சீசனில் எங்கெல்லாம் போகலாம்...: வருட ஆரம்பத்திலயே 2 இலட்சத்தை எட்டிய சுற்றுலா பயணிகளின் வருகை!

OruvanOruvan

Srilanka tourism

ஜனவரி மாதத்தில் மாத்திரம் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், ஜனவரி முதல் 28 நாட்களில் மட்டும் 189,574 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 6,770, அளவில் பதிவாகியுள்ளது.

அதன் பிரகாரம், ஜனவரி இறுதிக்குள் சுமார் 210,000 சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பரில், 210,351 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்திய சுற்றுலா பயணிகள்

ஜனவரியில் இதுவரையிலான புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் இரண்டாவது பெரிய குழு ரஷ்யாவிலிருந்து வந்தது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

OruvanOruvan

இலங்கையில் சுற்றிப்பார்ப்பதற்கு உகந்த இடங்கள்

அதிகமான இலங்கையில் சுற்றுலா பயணிகள் பதிவான இடங்களில், அருகம்பே, யால தேசிய பூங்கா, தம்புள்ளை குகைக் கோயில், சிகிரியா, பொலன்னறுவை, பித்தப்பை, கொமன்வெல்த் போர்க் கல்லறை, யாழ் கோட்டை, நுலரெலியா, பதுளை, மிஹிந்தலை ஆகிய இடங்கள் பதிவாகியுள்ளன.

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இலங்கைக்கு செல்ல சிறந்த நேரமென கருதப்படுகிறது.

இந்த மாதங்களில், வெப்பநிலை மிதமானதாக இருக்கும் மற்றும் வெளியில் சுற்றிப் பார்ப்பது ஒரு இனிமையான அனுபவமாக அமைவதால் அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தூண்டும் ஒரு நாடாக இலங்கை மாறியுள்ளது.

OruvanOruvan

இந்த சீசனில் பார்க்க கூடிய சிறப்பான இடங்கள் என்னென்ன?

இலங்கையை பொருத்தவரை டிசம்பர் ஜனவரி ஆகிய மாதங்கள் மலையகம் மற்றும் அது சார்ந்த பகுதிகள் அனைத்துமே மிகவும் குளிரான காலப்பகுதியாக காணப்படுகின்றது.

ஆகவே நுவரெலியா, பதுளை, ஹட்டன், சிவனொளிபாதமலை ஆகியன மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை தரக்கூடியது.

மேலும் அநேனமான வேடந்தாங்கல் பறவைகள் வந்து போகும் காலம் என்பதால் பறவைகள் சரணாலயங்களான சிங்கராஜ மலைகாடுகள், குமண தேசிய பூங்கா, புந்தலா தேசிய பூங்கா, சுண்டிக்குளம் தேசிய பூங்கா, கல் ஓயா தேசிய பூங்கா, கலமேதியா பறவைகள் சரணாலயம், போதினாகலா சரணாலணம், வீரவில் பறவைகள் சரணாலயம், பெத்தேகானா ஈரநில பூங்கா, குருலு கெலே - கேகாலை, மன்னார் பறவைகள் சரணாலயம், சிகிரியா சரணாலம் போன்ற பறவைகள் சரணாலயங்களை பார்வையிடலாம்.

எதிர்வரும் மாதங்கள் எப்படியிருக்கும்?

வசந்த காலம் ஆரம்பம்

மார்ச் மாதத்தில் வானிலை

இலங்கைக்கு விடுமுறைக்கு செல்ல மார்ச் ஒரு சிறந்த மாதமாகும்.

இது அதிக பருவத்தின் கடைசி மாதமாகும், பின்னர் மழைக்காலம் தொடங்குகிறது.

அனைத்து சுற்றுலாப் பகுதிகளிலும் அற்புதமான வானிலை உள்ளது. நாட்டின் மையத்தில் மிகக் குறைவான மழையும் பெய்யக்கூடியதாக இருக்கும்.

ஏப்ரல் மாதத்தில் வானிலை

ஏப்ரல் மாதத்தில் வானிலை இன்னும் நன்றாக இருக்கும். மே மாதத்தைப் போலவே காற்றின் வெப்பநிலை பகலில் +26 ° C மற்றும் இரவில் +21 ° C க்கும் குறையாது காணப்படும்.

நாட்டின் தெற்கில் எப்போதும் போல் சூடாக இருக்கும், மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அந்த காலப்பகுதியில் அதிகமாக வருவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan