பெலியத்தையில் ஐவர் கொலை: மேலும் மூவர் கைது
பெலியத்தையில் ஐவர் கொலைக்கு உதவிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, அன்றைய தினம் மாத்தறையில் மேலும் ஒரு சந்தேகநபர் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, அலவ்வா மற்றும் புஸ்ஸா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியமை மற்றும் குற்றச் செயல்களின் போது பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டமைக்காக இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெலியத்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு👇